சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் விமர்சன ரீதியாக அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது. இதைத்தொடர்ந்து மலையாளத்தில் கிறிஸ்டோபர், தெலுங்கில் ஏஜென்ட் என அவரது அடுத்தடுத்த படங்கள் என்கிற ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இன்னொரு பக்கம் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வரும் காதல் ; தி கோர் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. தற்போது சில நாட்களுக்கு படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் சற்று ரிலாக்ஸ் ஆன மம்முட்டி, எர்ணாகுளத்தில் உள்ள தான் படித்த சட்டக்கல்லூரிக்கு விடுமுறை தினத்தன்று ஒரு விசிட் அடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் படித்த அந்த கல்லூரியில் தன்னுடைய வகுப்பறைக்கு சென்று அமர்ந்து தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் மம்முட்டி. “நாங்கள் படிக்கும் காலத்தில் இங்கே தான் எங்கள் ஆட்டமும் பாட்டமும் நடக்கும்.. அதே சமயம் இது ஒரு பழைய சட்டசபை போலவும் நீதிமன்றம் போலவும் கூட இருந்தது” என்று தனது மலரும் நினைவுகளை ஒரு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார் மம்முட்டி. அவரது ரசிகர்களிடையே இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..