''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
யோகி பாபு கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛பொம்மை நாயகி' வருகிற பிப்ரவரி 3ல் வெளியாகிறது. தந்தை மகள் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி.எம்.குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, நடித்திருக்கிறார்கள், யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார்.
படத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது இதில் கலந்து கொண்டு யோகி பாபு பேசியதாவது: இந்த படம் எனது கேரியரில் முக்கியமான படம். இந்த படத்தில் கமெடி பண்ணக்கூடாது என்று இயக்குனர் சொல்லிவிட்டார். தன் மகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் தகப்பனின் மனது எப்படி வலிக்கும் என்பதை சொல்லும் படம். நானும் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாகி இருப்பதால் உணர்ந்து நடித்தேன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் லைவாக இருக்கும். லைவாக எடுக்கப்பட்ட படம் வெற்றி பெறும்.
அடிப்படையில் நான் காமெடியன். ஒரு காமெடி சீன் கிடைக்காதா என்று அலைந்தவன். இப்போது அதிகமான படங்களில் காமெடியனாகத்தான் நடிக்கிறேன். இந்த மூஞ்சி எப்போதுமே காமெடி மூஞ்சிதான். அதையும் தாண்டி யாராவது என்னோட முகம் பிடிச்சிருக்கு நீங்கதான் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவர்னு சொல்லி வந்தா வாங்க சேர்ந்த படம் பண்ணலாம் என்பேன். அப்படியான ஒரு படம்தான் இந்த படமும்.
இவ்வாறு அவர் பேசினார்.