வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை |

தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன், பின்னர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்தவர், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக சிலம்பாட்ட பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்து வரும் மாளவிகா, தற்போது தெலுங்கில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.
இதுகுறித்து சோசியல் மீடியாவில் ரசிகருடன் கலந்துரையாடபோது, தெலுங்கில் இதற்கு முன்பு விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். ஆனால் திடீரென்று அந்த படமே ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். இந்த படத்தின் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த படம் எனக்கு தெலுங்கில் ஒரு பெரிய என்ட்ரியை கொடுக்கும் என்று தெரிவித்திருக்கிறார் மாளவிகா மோகனன்.




