அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 67வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக நீண்ட தலைமுடி வளர்த்து பெரிய அளவில் தாடி வைத்து கேங்ஸ்டர் கெட்டப்புக்கு மாறியிருக்கிறார் விஜய். மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், நிவின் பாலி, திரிஷா உட்பட பலர் நடிக்கிறார்கள்.
இவர்களில் அர்ஜுன் முதன்முறையாக இந்த படத்தில் விஜய்யுடன் இணைவதோடு, அவரும் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதால் தனது கெட்டப்பை பெரிய அளவில் மாற்றி இருக்கிறார். தலையில் அதிகப்படியான முடி வளர்த்திருக்கும் அர்ஜுன், முகத்தில் பெரிய அளவில் மீசை வைத்திருக்கிறார். அவரது இந்த கெட்டப்பை பார்க்கும்போது அர்ஜுனும், விஜய் 67வது படத்தில் முக்கியமான வில்லன்களில் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. அது குறித்த புகைப்படம் மற்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.