ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் திரையுலகில் எப்படி நடிகர் சூர்யாவோ, அதேபோல மலையாள திரையுலகில் நடிகர் பிரித்விராஜ் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரித்திவிராஜ் தற்போது தெலுங்கில் சலார் படத்தில் வில்லனாகவும் இந்தியில் படே மியான் சோட்டே மியான் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யாவும், பிரித்விராஜூம் அவர்களின் மனைவியர் உடன் சேர்ந்து சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நடிகர் பிரித்விராஜ், ‛‛எங்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுடன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பிரித்விராஜ் பிஸியாக நடிக்க தொடங்கிய சமயத்தில் ஜோதிகாவுடன் இணைந்து மொழி என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சூர்யாவும் பிரித்விராஜூம் குடும்பத்துடன் சந்தித்திருப்பது பல புதிய யூகங்களையு எதிர்பார்ப்புகளையும் கிளப்பி விட்டுள்ளது.