'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம் உலக அளவில் பிரபலடைந்துள்ளது.
ஜப்பானில் வெளியான இந்தப் படம் தற்போது 100 நாட்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. 42 நேரடி சென்டர்கள் மற்றும் 114 ஷிப்ட் சென்டர்களில் தற்போது இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறதாம். ஒரு இந்தியத் திரைப்படம் ஜப்பான் நாட்டில் புரிந்துள்ள புதிய சாதனை இது.
ஜப்பான் மொழியில் 100 நாட்கள் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதைத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.
“அந்தக் காலத்தில் 100 நாட்கள், 175 நாட்கள் ஒரு படம் ஓடுவது பெரிய விஷயம். காலப் போக்கில் வியாபார அமைப்பு மாறிவிட்டது. கடந்து போன அவை ஒரு அழகான ஞாபகங்கள். ஆனால், ஜப்பான் ரசிகர்கள் அந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளார்கள். லவ் யு ஜப்பான், அரிகடோ கொசாய்மாசு” என ஜப்பான் மொழியிலும், நன்றி தெரிவித்துள்ளார் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலி.