Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி

27 ஜன, 2023 - 16:35 IST
எழுத்தின் அளவு:
Vikraman-comment-about-Azeem-victory

பிக்பாஸ் சீசன் 6-ல் டைட்டில் பட்டத்தை அசீம் தட்டிச் சென்றார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை முறையே விக்ரமன், ஷிவின் பிடித்தனர். என்னதான் அசீம் டைட்டில் பட்டத்தை வென்று, அதன் பரிசுத்தொகையை ஏழை மாணவர்களுக்காக கொடுத்திருந்தாலும் மக்கள் அசீமின் வெற்றியை ஏற்றுக்கொள்ளவேயில்லை. அதேசமயம் விக்ரமன் மற்றும் ஷிவினுக்கு வெளியுலகில் நல்ல மதிப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள விக்ரமன் அசீமின் வெற்றி குறித்து முதல் முறையாக கமெண்ட் செய்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'மக்கள் தீர்ப்பிற்கும் இந்த ரிசல்ட்டிற்கு சம்மந்தமே கிடையாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாக்களிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் செல்போன் இருக்க வேண்டும், அதில் ஹாட் ஸ்டார் ஆப்பை பயன்படுத்தவும் அதில் எப்படி வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் எல்லாம் செல்போன் கூட இல்லாத எளிய மக்கள். அவர்கள் எப்படி ஆன்லைனில் வாக்களிப்பார்கள்?. எனவே, மக்கள் ஆதரவிற்கு இந்த தீர்ப்பிற்கும் தொடர்பே இல்லை.

அதேபோல் அசீம் ஜெயித்தால் இந்த சமூகத்திற்கு ஒரு தவறான பிரதிபலிப்பை ஏற்படுத்திவிடும், அது ஆபத்து என்று நினைத்தென். அடாவடியாக, திமிராக மற்றவர்களை இழிவுப்படுத்தி விளையாடினால் தான் பிக்பாஸில் டைட்டில் வெல்ல முடியும் என மக்கள் நம்பிவிடக்கூடாது என்று பயந்தேன். ஆனால், அதுதான் வெட்டவெளிச்சமாக நடக்கிறது. இந்த வெற்றியோ, கோப்பையோ, பரிசோ உண்மை அல்ல என்பதை நீங்களும் நானும் நம்பவேண்டும். பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட அதைத்தான் நம்புகிறார்கள். அதனால் தான் என்னை இப்போது கொண்டாடுகிறார்கள்' என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
குக் வித் கோமாளி சீசன் 4ல் என்ட்ரியாகும் பிரபலங்கள் : ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்குக் வித் கோமாளி சீசன் 4ல் ... பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? பாக்கியலெட்சுமி சீரியலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
31 ஜன, 2023 - 05:55 Report Abuse
Kalaiselvan Periasamy தரமற்ற இந்த அரசியல்வாதியை என்ன வென்று சொல்வது . தமிழர்கள் என்றுமே முட்டாள்கள் என்று நினைக்கிறாரோ ?
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
30 ஜன, 2023 - 15:06 Report Abuse
ram விஜய் டிவி தடை செய்யலாம், மத கலவரத்தை தூண்டுகிறார்கள் என்று
Rate this:
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
29 ஜன, 2023 - 09:30 Report Abuse
Ramachandran CV Ramachandran முதல் வாரத்தில் வெளியேறிய சாந்தி முத்து தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அசீமை வேளியேற்றுவதில் ஒத்த கருத்துடன் வாக்களித்தால் மக்கள் வாக்கு எதிர்மறையானது. சிவின் மகேஸ்வரி மற்றும் விக்ரமன் பலமுறை தங்கள் வெறுப்பினை நேரிடையாகவே காட்டினார்கள். அதிலும் விக்ரமன் அசீம் தப்பு செய்தால் மட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்து சண்டையிடுவார். அவர் ஒன்றும் அறவழியில் செல்லவில்லை. அதனால்தான் அறம் தோற்றது. மக்களின் தீர்ப்பு சரியானது. கமல் மனநிறைவோடுதான் சரியான நபருக்கு பட்டம் வழங்கியுள்ளார்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
28 ஜன, 2023 - 19:23 Report Abuse
கல்யாணராமன் சு. விக்ரமனுக்கு வாக்களித்த "பெரும்பாலானோரிடம் அலைபேசி இல்லை , அவர்களுக்கு செயலியை பயன்படுத்தி வாக்களிக்க தெரியாது .... அதனால் அவர்கள் வாக்களிக்கவில்லை" என்றால், திருமாவளவன் எதற்காக, யாரிடத்தில் ட்விட்டரில் வாக்கு சேகரித்தார் ?? "அடாவடியாக, திமிருடன், மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால்தான் பிக் பாசில் வெல்லமுடியும் என்று மக்கள் நம்பிவிடக்கூடாது" என்று முத்து உதிர்க்கும் விக்ரமனின் "மாபெரும்" தலைவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? பெரும்பாலான மதத்தை சேர்ந்தவர்களை திமிருடன், இழிவுபடுத்தி பேசி, அடாவடி செய்துதானே தேர்தலில் வெற்றிபெற்றார் ? அவர் அப்படி ஜெயிக்கும்போது அது பரவாயில்லயா ??? அவர் ஜெயித்தது சரி என்றால், அசீமுக்கும் அப்படியே ... அசீம் ஜெயித்தது ஏமாற்று என்றால் , திருமாவுக்கும் அப்படியே .....
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
28 ஜன, 2023 - 14:15 Report Abuse
vadivelu தோல்வியே அவனின் கருத்துக்களுக்கும், செயல்களுக்கும் அல்வா கொடுத்தது
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in