10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

சின்னத்திரை ரசிகர்களின் விருப்ப நிகழ்ச்சியான குக் வித் கோமாளி, முதல் மூன்று சீசன்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. முன்னதாக வெளிவந்த புரோமோவில் முந்தைய சீசனில் இடம்பெற்ற சில குக்குகளும், கோமாளிகளும் இடம்பெறவில்லை. எனவே, இந்த சீசனில் புதிதாக யார் யார்? என்ட்ரி கொடுக்கிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புது புரோமோவில் செலிபிரேட்டிகளின் என்ட்ரி காண்பிக்கப்பட்டுள்ளது. இதில், ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா ஆகியோர் புதிய கோமாளிகளாக அறிமுகமாகியுள்ளனர்.
புதிய குக்குகளாக நடிகை சிருஷ்டி டாங்கே, ஜிகர்தண்டா புகழ் காளையன், வலிமை படத்தில் நடித்த ராஜ் ஐயப்பன், நடிகை விசித்திரா, நாய் சேகர் பட இயக்குநர் கிஷோர், பிக்பாஸ் புகழ் ஷெரின், பாக்கியலெட்சுமி சீரியலில் நடித்து வரும் வீஜே விஷால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், சர்ப்ரைஸ் என்ட்ரியாக ஒரு வெளிநாட்டு பெண்ணும், சென்ற சீசனில் கோமாளியான சிவாங்கியும் குக்காக என்ட்ரி கொடுக்கின்றனர். இந்நிகழ்ச்சியானது வருகிற ஜனவரி 28 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30க்கு ஒளிபரப்பாகிறது.