''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான அபிநயா தமிழில் நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ்பெற்றார். அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ம் அறிவு, வீரம், தனியொருவன், குற்றம் 23, விழித்திரு உள்பட பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் அவர் முதன் முறையாக 'குற்றம் புரிந்தால்' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய டிஸ்னி இயக்குகிறார். ஆதிக் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். பெங்களூர்வைச் சேர்ந்த அர்ச்சனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார், கே.எஸ்.மனோஜ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் டிஸ்னி கூறியதாவது: மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தி அடைந்த ஒருவன், தன் கைகளில் சட்டத்தை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்து, சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளேன். பழிவாங்கத் துடிக்கும் ஹீரோவை விரட்டும் போலீஸ் அதிகாரியாக அபிநயா நடிக்கிறார், என்கிறார்.