'இந்தியன் 2' தீபாவளிக்கு வெளியிட திட்டம் | கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் | 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது ? | இளையராஜாவை சந்தித்து நன்றி சொன்ன வெற்றிமாறன் | 'பத்து தல' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | விடுதலை படக்குழுவினருக்கு தங்க நாணயம் தந்த வெற்றிமாறன் | பாலாவின் வணங்கான் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் துவங்குகிறது | முகேஷ் அம்பானி வீட்டு கலாச்சார நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் | பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் மார்கழி திங்கள் | 'பத்து தல'யை தடுமாற வைக்கும் 'விடுதலை' |
மலையாள திரை உலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் மம்முட்டி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் அவர் இப்படி எல்லாம் கூட எளிமையான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்கிற ஆச்சர்யத்தை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு ஒரு எளிய கிராமத்து மனிதனாக அந்த படத்தில் நடித்திருந்தார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் இதற்கு நேர் மாறாக துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மம்முட்டி. இந்த படத்திற்கு கண்ணூர் ஸ்குவாட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ஆன ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வழக்கம் போல இந்த படத்தின் கதையும் மம்முட்டிக்கு ரொம்பவே பிடித்து போனதால் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி சார்பில் தானே இந்த படத்தை தயாரிக்கிறார். இன்னும் இதன் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகாத நிலையில் தானே படத்தின் தயாரிப்பாளர் என்பதால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தின் டைட்டில் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் மம்முட்டி.