மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் |

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் பட்டம் வென்றதை மக்கள் பலரும் விரும்பவில்லை. பிக்பாஸ் குழு மற்றும் கமல்ஹாசன் மீது தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ரெட்கார்டு போட்டு வெளியேற்றப்பட வேண்டியவருக்கு டைட்டில் வின்னர் பட்டமா? என்றும் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில், அசீமின் வெற்றியை சக ஹவுஸ்மேட்டுகள் சிலர் கொண்டாடி வருகின்றனர், சிலர் விமர்சிக்காமல் கடந்து செல்கின்றனர். ஆனால், இந்த சீசனின் முக்கிய போட்டியாளரான மகேஸ்வரி அசீமின் இந்த வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், 'அசீம் ஜெயித்தது தவறான முன் உதாரணம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு பத்திரிகையின் கட்டுரையை பகிர்ந்து அதை முதலில் காண்பிக்கும் படி பின் செய்து வைத்துள்ளார். மற்ற ஹவுஸ்மேட்டுகள் அசீமின் இந்த வெற்றியை குறித்து மவுனம் காத்துவரும் நிலையில், மகேஸ்வரி தைரியமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளதால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.