'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் கவுண்டமணி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'பழனிசாமி வாத்தியார்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கவுண்டமணியின் நகைச்சுவை இன்றைய தலைமுறையினருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. இப்போதைய மீம்ஸ்கள் பலவற்றிலும் அவரது பட வசனங்கள், நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெறுகின்றன.
கவுண்டமணி காமெடியின் பாதிப்பு இல்லாமல் இன்றைய நகைச்சுவை நடிகர்களால் இருக்கவே முடியாது என்பதே உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானத்தின் பல நகைச்சுவைகள் கவுண்டமணி நகைச்சவையின் இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளது. இரண்டாவது முறையாக கவுண்டமணியின் காமெடியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் சந்தானம்.
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 'வடக்குபட்டி ராமசாமி' என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. பிரபு, குஷ்பு, கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்து 1993ல் வெளிவந்த 'உத்தமராசா' என்ற படத்தில் கவுண்டமணியின் காமெடியில் இடம் பெற்று ஒரு நகைச்சுவைக் கதாபாத்திரம்தான் 'வடக்குபட்டி ராமசாமி'. கார்த்திக் யோகி, சந்தானம் இருவரும் இதற்கு முன்பு இணைந்த 'டிக்கிலோனா' படத்தின் தலைப்பும், அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்து 1993ல் வெளிவந்த 'ஜென்டில்மேன்' படத்தில் கவுண்டமணி காமெடி காட்சியில் இடம் பெற்ற ஒரு விளையாட்டுதான் 'டிக்கிலோனா'.
கார்த்திக் யோகி, சந்தானம் இருவரும் இரண்டாவது முறையாக கவுண்டமணியின் காமெடி சார்ந்த பெயரை தங்களது படங்களின் தலைப்பாக வைத்துள்ளனர்.