'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் | முகத்தை காட்டாமல் நடித்து இருக்கும் புதுமுக நாயகன், நாயகி | நிறைய பாலியல் தொல்லை : பாடகி ஜொனிடா காந்தி | விஜயகாந்த் வழியில் பயணிக்கும் சண்முக பாண்டியன் | அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து மீண்டும் ரிலீஸ் செய்யும் லிங்குசாமி | 45வது படத்தில் கடவுள் வேடத்தில் நடிக்கும் சூர்யா | பிளாஷ்பேக்: சொப்பன சுந்தரி யார் தெரியுமா? |
விஜய்யின் 66வது படமான 'வாரிசு' இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்து 250 கோடி வசூலையும் கடந்துவிட்டது. அப்படம் வெளியான உடனேயே விஜய்யின் 67வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், இன்னமும் அறிவிப்பு வெளியாகவில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் இணையும் படம். அப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் இயக்கிய 'விக்ரம்' படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. அதனால், லோகேஷ், விஜய் மீண்டும் இணையும் விஜய் 67 படம் அந்த அளவுக்கு வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
'வாரிசு' படத்தின் கொண்டாட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வரும் சூழ்நிலைக்கு வந்துவிட்டது. அடுத்து விஜய் 67 கொண்டாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் அடிக்கடி 'தளபதி 67' என்பதை டிரெண்டிங்கில் கொண்டு வருகிறார்கள்.
'விஜய் 67' பட அறிவிப்பு 'விக்ரம்' பட அறிவிப்பு போலவே ஒரு அறிமுக வீடியோ டீசருடன் வெளியாக உள்ளது. கூடிய விரைவில் அது வரலாம் என்கிறார்கள்.