நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மலையாள இயக்குனருடன் இணையும் சூர்யா | நான் பத்தாம் வகுப்பு பெயில் - கத்ரீனா கைப் | சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு |
விக்ரம் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூரலிகான் உட்பட பலர் நடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது விக்ரம் படத்தில் நடித்த பஹத் பாசிலும் விஜய்- 67 வது படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பஹத் பாசில் கூறுகையில், லோகேஷ் கனகராஜ் சினிமா யுனிவர்ஸ் என்ற அடிப்படையில் விஜய் 67 வது படத்தில் நானும் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார். இதேபோல் கைதி படத்தில் இடம்பெற்ற டில்லி கேரக்டரும் விஜய் 67 வது படத்தில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது விஜய் 67வது படத்தில் கார்த்தி, பஹத் பாசில் ஆகியோரும் இடம் பெறுவது உறுதியாகி இருக்கிறது.