'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் தற்போது இயக்கி உள்ள படம் மைக்கேல். சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் திவ்யங்கா கௌஷிக் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பிகில் ராயப்பன் என்ற ஒரு அதிரடியான வில்லனாக நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இந்த மைக்கேல் படத்தில் வரலட்சுமி சரத்குமார், கவுதம் மேனன், அனுசியா பரத்வாஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த தமிழ் டிரைலரை நடிகர் ஜெயம் ரவி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள். அதிரடியான ஆக்சன் காட்சிகள் நிறைந்த இது டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.