ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா | நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? |
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஒரு நடிகையாக மட்டுமல்ல பாடகியாக, இசை அமைப்பாளராக, சமூக சேவகியாக பல்வேறு முகங்களை கொண்டவர் சமீபத்தில் இவர் நடித்த வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
ஸ்ருதிஹாசனுக்கு டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பவர் காரிடார்ஸ் (பிசி) இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விருதை வழங்கினார். இது பல்வேறு களங்களில் இருந்து தேசத்திற்கு சேவை செய்ய முன்வந்த குடிமக்களின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து வழங்கப்படும் விருதாகும்.
விருது பெற்றது குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது “இந்த விருதைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதற்காக நான் நடுவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கலைப் பணிக்காக பாராட்டப்படுவது எப்போதுமே பணிவானது. முக்கியமான விஷயங்களுக்கு எனது தளத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.