'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
வாரிசு படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய்யின் 67வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வாரிசு படத்திற்காக இதுநாள் வரை படத்தின் அப்டேட் வெளியிடாமல் இருந்து வந்த லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இனி ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபலமான இலங்கையை சேர்ந்த ஜனனியும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளாராம். படத்தில் இவர் விஜய்யின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்கிறார் ஜனனி.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த லாஸ்லியா தமிழ் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் வழியில் இப்போது ஜனனியும் தமிழ் படங்களில் நடிக்க களமிறங்கி உள்ளார்.