''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2022ம் ஆண்டில் இந்தியத் திரையுலகத்தில் தென்னிந்தியப் படங்கள்தான் அதிக வசூலைக் குவித்தன. பல பெரிய நடிகர்களின் படங்கள் வந்தாலும் ஹிந்திப் படங்கள் பெரிய அளவில் வசூலைக் குவிக்கவில்லை. 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, விக்ரம், பொன்னியின் செல்வன், காந்தாரா' ஆகிய தென்னிந்தியப் படங்கள் மட்டுமே சுமார் 3800 கோடியை வசூலித்தன.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தென்னிந்தியப் படங்கள் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாட்சியாக இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த படங்கள் அமைந்துள்ளன. தமிழில் 'வாரிசு, துணிவு' ஆகிய படங்களும், தெலுங்கில் 'வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய படங்களும் இதுவரையிலும் 450 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளன. 'துணிவு' படத்தைத் தவிர மற்ற படங்களின் வசூல் என்ன என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 'துணிவு' படமும் 100 கோடியைக் கடந்திருக்கலாம்.
இந்தப் படங்கள் மேலும் 100 முதல் 150 கோடி வரை வசூலிக்க வாய்ப்புண்டு. இப்படங்கள் முழுவதுமாக ஓடி முடித்த பின் அந்த வசூல் மொத்தமாக 600 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது. 2023ம் ஆண்டின் ஆரம்பமே அமர்க்கமாக உள்ளது என தமிழ், தெலுங்கு திரையுலகினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.