அம்பிகா, ராதா ஸ்டுடியோவில் படப்பிடிப்புகளுக்குத் தடை ? | 3 மணி நேரம் ஓடப் போகும் 'சலார்' | ஒரே நாளில் இரண்டு 'சர்ப்ரைஸ்' கொடுத்த சமந்தா | பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் | காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜன., 11ல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். அஜித்தின் 62வது படமாக உருவாகும் இந்த படத்தின் பணிகள் துவங்கி உள்ளன. ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பாக அமையும். இதற்கு முன் கடந்த 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித், மம்முட்டி, தபு, அப்பாஸ் உடன் ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் ஜோடியாக அவர் நடிக்கவில்லை. ஆனால் தற்போது அவர் அஜித் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.