2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மேயாதமான் படம் மூலம் தமிழில் நாயகியாக களமிறங்கிய பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கிலும் கால்பதித்துள்ள இவர் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. எதிர்காலத்தை பற்றி பெரிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தேன். ரசிகர்கள் ஏற்பார்களா, இல்லையா என்று யோசிக்கவில்லை. நடித்தால் பணம் வருகிறது என நினைத்து, நடித்தேன். சினிமா பின்னணி உள்ளவர்களே சினிமாவில் தங்களை நிரூபிக்க கஷ்டப்படுகிறார்கள். அவர்களை பார்க்கும்போது நான் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என நினைக்கிறேன்'' என்றார்.