சர்தார் 2 படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள் | டிசம்பர் மாதத்தில் புறநானூறு பட படப்பிடிப்பு? | சுந்தர்.சி இயக்கத்தில் ரவி தேஜா? | தேசிய விருது பெற்ற மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் : ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு | 'விவாரியம்' ஹாலிவுட் படத்தின் ரீமேக் 'பிளாக்' ? | இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஓடிடியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர் நாற்காலியின் 4வது கால் | லிப்லாக் முத்த காட்சியில் நடிக்க ஒளிப்பதிவாளர் தான் காரணம் : இனியா | பிளாஷ்பேக் : நடிகராக தோற்று இயக்குனராக ஜெயித்த பி.ஆர்.பந்துலு | விவாகரத்து வழக்கில் ஆஜராகவில்லை : தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா? |
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் என இரண்டு படங்களும் அவரை முன்னணி இளம் நட்சத்திரமாக உயர்த்தின. அதேசமயம் அதைத்தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றிகளை தரவில்லை. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான லைகர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் குஷி என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இதைத்தொடர்ந்து தனது அடுத்த படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் தேவரகொண்டா.
இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஜெர்சி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் கவுதம் தின்னனூரி இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. போலீஸ் யூனிபார்ம் அணிந்த, யாரென்று முகம் தெரியாத ஒரு உருவத்துடன் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.