நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்தாண்டு கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'காந்தாரா'. கன்னடத்தில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகே மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.
அப்படத்தைப் பாராட்டி கமல்ஹாசன் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ஒரு பாராட்டுக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தைப் பகிர்ந்து ரிஷப் ஷெட்டி, “இந்திய சினிமாவின் ஜாம்பவானிடமிருந்து இப்படி ஒரு அன்பான மெசேஜ் கிடைக்கப் பெற்றதற்கு நிறைய அர்த்தம் உண்டு. கமல் சாரிடமிருந்து இப்படி ஒரு எதிர்பாராத பரிசைப் பெற்றது மிகவும் பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது. இப்படி ஒரு மதிப்பான பரிசைத் தந்ததற்கு நன்றிகள் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படம் வெளியான பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ரிஷப் ஷெட்டி வாழ்த்து பெற்றார். இப்போது நடிகர் கமல்ஹாசனும் அவரைப் பாராட்டியுள்ளார். இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் ரிஷப்பை 'காந்தாரா' படத்திற்காகப் பாராட்டியுள்ளனர்.