எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு படங்கள் சில நாட்களுக்கு முன்பு ஜனவரி 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 'வாரிசு' படம் மட்டும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அன்று வெளியாகாமல் இன்றுதான்(ஜன., 14) வெளியானது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே எந்தப் படம் அதிக வசூலைக் குவிக்கிறது என்பது குறித்து 'நம்பர் கேம்' சண்டை ஆரம்பமானது. படம் வெளியான முதல் நாளில் 'துணிவு' படத்தின் வசூல் அதிகம் என்றும், இரண்டாம் நாளில் 'வாரிசு' படத்தின் வசூல் அதிகம் என்றும் பேச ஆரம்பித்தார்கள்.
நேற்று மாலையில் டுவிட்டர் தளத்தில் ‛டிராக்கர்கள்', ‛இன்புளூயன்சர்கள்', ‛டிரேட் அனலிஸ்ட்' என அழைக்கப்படும் சிலர் சொல்லி வைத்தாற் போல் இரண்டாம் நாளில் 'வாரிசு' வசூல்தான் அதிகம் என்ற ரீதியில் ஒரே சமயத்தில் டுவீட் போட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 'துணிவு' படத்தின் வினியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தனித்தனியாக பதிலடி கொடுத்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டிருந்தார்.
“தம்பி, உருட்டு, உருட்டு, உருட்டு,“, “புரோ, இருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது”, “சியர்ஸ் புரோ, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், ஹாப்பி துணிவு பொங்கல்”, “துணிவுடன் நேரில் வந்து 'துணிவு' கலெக்ஷன் பத்தி தெரிஞ்சிக்கவும். பிரதர், உங்களுக்கு உண்மை தெரியும் என நினைக்கிறேன், ஹாப்பி துணிவு பொங்கல் புரோ” என விதவிதமாக பதிலடி கொடுத்துள்ளார்.
'வாரிசு, துணிவு' படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான் அவற்றின் உண்மையான வசூல் என்னவென்று தெரியும். அப்படியிருக்க யார், யாரோ அவர்கள் இஷ்டத்திற்கு இப்படி பொய்யான வசூல் தகவலைப் பரப்புவதாக கோலிவுட்டில் கொந்தளிக்கிறார்கள்.
இதனிடையே, 'துணிவு' குழுவினர் 'ரியல் வின்னர்' என்றும், 'வாரிசு' குழுவினர் 'பொங்கல் வின்னர்' என்றும் ஏட்டிக்குப் போட்டியாக போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்கள்.