நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு |
எண்பதுகளின் மத்தியில் சாக்லேட் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ராம்கி. தொடர்ந்து கதாநாயகனாக பல படங்களில் நடித்தவர், தொண்ணூறுகளின் இறுதியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களில் நடித்தார். 2003க்கு பிறகு பெரிய அளவில் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கிய ராம்கியை கிட்டத்தட்ட 10 வருட இடைவெளிக்கு பிறகு தான் இயக்கிய பிரியாணி படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைத்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. அந்த படம் ராம்கிக்கு ஒரு புது இன்னிங்ஸ் துவக்கமாக அமைந்து, அதன்பிறகு வருடத்திற்கு இரண்டு படங்களிலாவது நடித்து வருகிறார்.
கடந்த வருடம் கூட தனுஷின் தந்தையாக மாறன் படத்திலும் மற்றும் குருமூர்த்தி என்கிற படத்திலும் நடித்திருந்தார் ராம்கி. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கும் கஸ்டடி என்கிற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, 10 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராம்கியை அழைத்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.