பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி | சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு? | சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'? |

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவான 'வாரிசு' படம் தமிழில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜனவரி 11ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் கடந்த இரண்டு நாட்களாக நன்றாக வசூலித்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் தயாரான இப்படத்தின் ஹிந்தி டப்பிங் இன்று வெளியாகியுள்ளது. வட இந்தியாவில் பல தியேட்டர்களில் இப்படம் வெளியாகி உள்ளது. ஆனால், காலை காட்சிக்கே பெரிய அளவில் முன்பதிவு நடக்கவில்லை. தமிழில் எடுக்கப்படும் படங்கள் மற்ற மொழிகளில் வெளியானால் படக்குழுவினர் சென்று அந்தப் படங்களை புரமோஷன் செய்ய வேண்டும்.
ஆனால், 'வாரிசு' படத்தைப் பொறுத்தவரையில் ஹிந்தியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை. தெலுங்கில் நேற்றுதான் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்ட பிரஸ்மீட் நடைபெற்றது. அதில் கூட படத்தின் கதாநாயகன் விஜய், கதாநாயகி ராஷ்மிகா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. தெலுங்கில் நாளை ஜனவரி 14ம் தேதி இப்படம் வெளியாகிறது. அங்கு ஓரளவிற்கு முன்பதிவு நடைபெற்றுள்ளது.