ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
இந்த பொங்கல் வெளியீடாக அஜித்தின் ‛துணிவு' படமும், விஜய்யின் ‛வாரிசு' படமும் ஒரே நாளில் நேற்று(ஜன., 11) வெளியாகின. இரண்டு படங்களிலும் துணிவு படம் விறுவிறுப்பாக நகர்வதாகவும், வாரிசு படம் மெதுவாக நகர்வதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன. வசூலிலும் இரு படங்களுக்கு பலத்த போட்டி நிலவுகிறது.
இதுஒருபுறம் இருக்க, இரண்டு படங்கள் பற்றிய ஒவ்வொரு அறிவிப்பும் போட்டியாகவே மாறி வந்தது. குறிப்பாக இரண்டு பட டிரைலர்களுக்குள் அதிக போட்டி நிலவின. ஆனால் துணிவு டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு வாரிசுக்கு கிடைக்கவில்லை. அதேசமயம் ‛பீஸ்ட்' பட டிரைலர் சாதனையை துணிவு முறியடிக்கவில்லை என விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். இப்போது அந்த சாதனை அஜித் வசமாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளிவந்த டிரைலர்களில் யு-டியுபில் அதிகப் பார்வைகளைப் பெற்று விஜய் நடித்த 'பீஸ்ட்' டிரைலர் முதலிடம் இருந்தது. அந்த டிரைலருக்கு இதுவரையில் (ஜன.,12 மாலை 6:30 மணி) 60 மில்லியன் (6,07, 31,187) பார்வைகள் கிடைத்தன. அந்த சாதனையை தற்போது அஜித் நடித்துள்ள 'துணிவு' டிரைலர் முறியடித்துள்ளது.
'துணிவு' டிரைலர் தற்போது வரை (ஜன.,12 மாலை 6:30 மணி) 60 மில்லியன் (6,08,21,792) பார்வைகளைக் கடந்து நம்பர் 1 டிரைலர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. 9 மாதங்களில் பீஸ்ட் டிரைலர் செய்த சாதனையை வெறும் 12 நாளில் துணிவு டிரைலர் முறியடித்துள்ளது.
அதேசமயம் விஜய் நடித்துள்ள 'வாரிசு' டிரைலர் தற்போது 43 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது. 'துணிவு' டிரைலர் சாதனையை முறியடிக்க மேலும் 18 மில்லியன் பார்வைகள் தேவைப்படும். இதனால் 'துணிவு' டிரைலர் நம்பர் 1 இடத்தில் சில காலம் நீடிக்கும்.