
குழந்தை நட்சத்திரம்... இப்போது சீரியல் நடிகர் : ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்
சூர்யா- அசீன் நடிப்பில் வெளியான கஜினி படத்தில் தான் சாணக்யா குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமானார். தொடர்ந்து மம்முட்டியுடன் "ஒரு காதல்", அஜித்துடன் "பரமசிவன்" மற்றும் "சக்கரவியூகம்" உட்பட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
சின்னத்திரையில் "மெட்டி ஒலி" தான் சாணக்யனுக்கு முதல் சீரியல். இதை நடிகர் சாணக்யனே தனது இன்ஸ்டாவில் வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் பலரும் "அந்த சின்ன பையனா இப்படி வளர்ந்துட்டார்?" என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். தவிரவும் சாணக்யன் பிரபல சீரியல் நடிகை கீதா சரஸ்வதியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!