ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
திரைப்படம் மற்றும் சீரியல் நடிகையான நீலிமா இசை திருமணத்திற்கு பின் பொறுப்பான குடும்ப பெண்ணாக வாழ்க்கை நடத்தி வருகிறார். சீரியல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி திறம்பட நிர்வகித்து வருவதுடன் அவ்வப்போது சில சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறார். இருப்பினும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக தனது குடும்ப புகைப்படங்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
பொதுவாக நடிகைகளை பின்தொடரும் சில நெட்டிசன்கள் அவர்கள் அழகை மிகவும் ஆபாசமாக வர்ணித்தும் அவருக்கு எதிராக பல நெகட்டிவான கருத்துகளையும் கூறிவருவது வழக்கம். நீலிமாவின் புகைப்படங்களுக்கும் அதுபோல கமெண்டுகள் வந்துள்ளது. இதுபோன்ற மோசமான குணம் கொண்ட நபர்களை ப்ளாக் செய்துள்ள நீலிமா அவர்களுடைய புரொபைல்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதை பார்த்தால் நீலிமாவை பின் தொடர்பவர்களை காட்டிலும், அவர் ப்ளாக் செய்த லிஸ்ட்டுதான் பெரிதாக இருப்பது போல் தோன்றுகிறது.
நீலிமா அந்த பதிவில், 'நம்மைச் சுற்றி ஏராளமான எதிர்மறையான நபர் இருக்கிறார்கள். அவர்களை நாம் புறக்கணித்துவிட்டு நகர வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதை தான் நானும் செய்தேன் என கூறியுள்ளார்.
நிலீமாவின் இந்த செயலை பாராட்டி வரும் பொதுமக்கள் அவரை போலவே மற்றவர்களும் நெகட்டிவாக பேசுபவர்களை ப்ளாக் செய்து புறக்கணிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.