புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
நடிகர் ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பர் வி.எம்.சுதாகர். ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அடுத்த ஆண்டு வி. எம். சுதாகர் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது இருந்தே நடிகர் ரஜினிகாந்த் வி.எம். சுதாகர் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக செயல்பட்ட சத்தியநாராயணா மாற்றப்பட்டபோது வி.எம்.சுதாகரை அழைத்து தன்னுடைய ரசிகர் மன்றத்தை பார்த்துக் கொள்ள கூறியிருந்தார். அதன் முதல் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகியாக வி.எம்.சுதாகர் செயல்பட்டு வந்தார். மேலும் ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்ட போதும் அதன் தலைமை நிர்வாகியாக வி.எம் சுதாகர் செயல்பட்டார்.
கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக கோளாறு பிரச்னை காரணமாக மருத்துவமனையில் இருந்த சுதாகரின் சிகிச்சை செலவை ரஜினி ஏற்றிருந்தார். இந்த நிலையில் வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவால் இன்று (ஜன.,6) காலமானார். 71 வயதான சுதாகருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
வி.எம்.சுதாகர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு: என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.