இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

பொங்கலை முன்னிட்டு வெளிவரும் 'துணிவு, வாரிசு' படங்களின் டிரைலர்கள் வெளியானதைத் தொடர்ந்து அவை புதிய சாதனைகளைப் படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முந்தைய சாதனைகளை முறியடிக்காமல் இரண்டு டிரைலர்களுமே பின் தங்கிப் போனது. அடுத்து முந்தைய தமிழ் சினிமா டிரைலர்களின் மொத்த பார்வைகளை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளிவந்துள்ள டிரைலர்களில் அதிகப் பார்வைகளைப் பெற்று டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள டிரைலர்கள்.
1.பீஸ்ட் - 60 மில்லியன்
2.பிகில் - 58 மில்லியன்
3.துணிவு - 55 மில்லியன்
4.காஞ்சனா - 43 மில்லியன்
5.விஸ்வாசம் - 35 மில்லியன்
6.பேட்ட - 29 மில்லியன்
7.சூரரைப் போற்று - 28 மில்லியன்
8.மாரி 2 - 27 மில்லியன்
9.ஜெய் பீம் - 24 மில்லியன்
10.2.0 - 23 மில்லியன்
24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ் டிரைலர்கள்
1.பீஸ்ட் - 29 மில்லியன்
2.துணிவு - 25 மில்லியன்
3.வாரிசு - 23 மில்லியன்
4.பிகில் - 18 மில்லியன்
5.வலிமை - 11 மில்லியன்
24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற தென்னிந்திய டிரைலர்கள்
1.பீஸ்ட் - 29 மில்லியன்
2.சர்க்காரு வாரி பாட்டா (தெலுங்கு) - 26 மில்லியன்
3.துணிவு - 25 மில்லியன்
4.ராதேஷ்யாம் (தெலுங்கு) - 23 மில்லியன்
5.வாரிசு - 23 மில்லியன்