'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
மலையாளத்தில் இளம் நடிகரான உன்னி முகுந்தன், தனுஷுடன் இணைந்து நடித்த சீடன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த முகம் தான். அதுமட்டுமல்ல அனுஷ்காவுக்கு ஜோடியாக பாகமதி படத்திலும், சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா படத்திலும் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து தென்னிந்திய அளவில் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். மலையாளத்தில் தற்போது இவர் நடித்துள்ள மாளிகப்புரம் படம் டிசம்பர் 30-ம் தேதி வெளியானது. அறிமுக இயக்குனர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார்.
எட்டு வயது சிறுமி ஒருவர் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க விரும்புகிறார். அதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. குறிப்பாக சபரிமலையில் ஐயப்பனின் சன்னிதானம் அருகே அமைந்துள்ள மாளிகைப்புரத்து அம்மன் கதையையும் இந்த படம் விவரிக்கிறது. மலையாளத்தில் வரவேற்பு பெற்றுள்ள இந்த படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் ஜனவரி 6ம் தேதி வெளியாக இருக்கிறது.