‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் பதியும் விதமான கதாநாயகர்கள் எப்போதாவது ஒருமுறை தான் அறிமுகம் ஆகிறார்கள். அதேசமயம் இளம் குணச்சித்திர நடிகர்கள் கதாபாத்திரத்திற்கும் தமிழ் சினிமாவில் பஞ்சம் நிலவத்தான் செய்கிறது. அந்த வகையில் தற்போது நம்பிக்கையூட்டும் குணச்சித்திர நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் விவேக் பிரசன்னா. இதற்கு முன்னதாக பேட்ட படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து ரசிகர்களிடம் ஓரளவு அறிமுகமானவர், சின்னச்சின்ன வில்லன் வேடங்களில் நடித்து வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான வெலோனி என்கிற வெப் சீரிஸில் முழுவதும் வருகின்ற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் அதேசமயம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கடந்த வாரம் ஓடிடியில் வெளியான உடன்பால் என்கிற திரைப்படத்தில் மிகச்சிறந்த காமெடி நடிப்பால் இன்னும் ஒருபடி நடிப்பில் மேலே சென்றுள்ளார் விவேக் பிரசன்னா.
அடுத்ததாக இவரது நடிப்பில் பொய்யின்றி அமையாது உலகு என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் நம்பிக்கை தரும் குணச்சித்திர நடிகராக வளர்ந்து வரும் விவேக் பிரசன்னாவை வரும் காலங்களில் ஹீரோவாக்கும் முயற்சி நடந்தாலும் நடக்கலாம். ஆச்சரியப்படுவதற்கு இல்லை.