'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளிவந்த படம் 'விஸ்வாசம்'. அப்படத்தில் இடம் பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் சூப்பர் ஹிட்டான ஒரு பாடல். தாமரை எழுதி, சித் ஸ்ரீராம் பாடிய அந்தப் பாடல் ஒரு அப்பா, தனது அன்பு மகளைப் பற்றிப் பாடிய பாடலாக அமைந்தது. அந்த ஒரு பாடலே படத்தின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தது.
2018ல் அப்பாடலின் லிரிக் வீடியோ வெளிவந்து 155 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அடுத்து வீடியோ பாடலை 2020 ஜனவரியில்தான் வெளியிட்டனர். இந்த இரண்டு வருடங்களில் வீடியோ பாடல் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ் சினிமா பாடல்களில் சுமார் 10 பாடல்கள் மட்டுமே 200 மில்லியன் பார்வைகளை இதுவரை கடந்துள்ளன.
'மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் 1400 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அஜித் நடித்த படத்தின் பாடல் ஒன்று 200 மில்லியன் பார்வைகளைப் பெறுவது இதுவே முதல் முறை. அதே சமயம் விஜய்யின் 'பீஸ்ட்' பாடலான 'அரபிக்குத்து' லிரிக் வீடியோ 498 மில்லியன் பார்வைகளையும், 'மாஸ்டர்' பாடலான 'வாத்தி கம்மிங்' வீடியோ பாடல் 412 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.




