விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவு : நெகிழ்ச்சியில் மகிழ்திருமேனி | ஹீரோவின் தலையீட்டால் படத்திலிருந்தே வெளியேறிய ஸ்ருதிஹாசன் | சட்டப்படி நடவடிக்கை - அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு | சன்னி லியோனுக்கு மாதம் 1000 உதவி தொகையா? - மோசடி புள்ளி சிக்கினார் | ஏஜிஎஸ்-ஐ தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸிற்கு படம் இயக்கும் வெங்கட் பிரபு | கங்குவா இரண்டாம் பாகம் : நட்டி நட்ராஜ் வெளியிட்ட தகவல் | இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கிறார்கள் - தேவா பேட்டி | மைசூரு பண்ணை வீட்டில் தங்க நடிகர் தர்ஷனுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி | 'பரோஸ்' படத்திற்காக ஓவியப்போட்டி: குழந்தைகளுக்கு பரிசளித்த மோகன்லால் | எம்ஜிஆருடன் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் நடிக்க விரும்பும் சரத்குமார் |
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனகூடு திருவிழா நடக்கும். இதில் இந்தியா முழுக்க உள்ள இஸ்லாமியர்கள் கலந்து கொள்வார்கள். 466ம் ஆண்டு சந்தனகூடு திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்தூபி இசையுடன் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு வைபவம் நடந்தது.
சந்தனகூடு விழாவில் கலந்து கொள்ள வந்த ஏ.ஆர்.ரஹ்மான் காரில் நாகூர் சென்றார். மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரால் தர்காவுக்கு செல்ல முடியவில்லை. அதனால் ஒரு ஆட்டோவில் ஏறி தர்காவுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து மற்றொரு ஆட்டோவில் அவரது பாதுகாவலர்களும், போலீசாரும் சென்றனர்.
தர்காவுக்கு ஆட்டோவில் வந்து இறங்கிய ரஹ்மானை பார்த்து பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர். கூட்டம் கூடுவதற்குள் அவரை தர்காவுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு நடந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் வழிபாடு செய்து விட்டு திரும்பினார்.