ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை கடைசியாக இயக்கிய செல்வராகவன், சாணிக்காயுதம், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து தற்போது பகாசூரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் பல வாழ்க்கை தத்துவங்களை உதிர்த்து வருகிறார் செல்வராகவன். அந்த வரிசையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பதிவில், ‛‛தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம், நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் ஓடும்'' என்று பதிவிட்டிருந்தார்.
செல்வராகவனின் இந்த பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பின. தனது தம்பியான நடிகர் தனுஷ் மனைவியை விவாகரத்து செய்ததை போல, இவரும் தனது மனைவி கீதாஞ்சலியை பிரிகிறாரா என பல்வேறு யூகங்கை கிளப்பியது. இந்த நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் மனைவி கீதாஞ்சலியுடன் இருக்கும் புகைப்படத்தினைப் பதிவிட்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவன் தனது முதல் மனைவியான நடிகை சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




