பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சமந்தா. தென்னிந்திய சினிமாவில் கடந்த 12 ஆண்டுகளாக பிசியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அவர், தற்போது சாகுந்தலம், குஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களாக மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் புத்தாண்டு செய்தி ஒன்று வெளியிட்டு இருக்கிறார் சமந்தா. அதில், ‛‛முன்னோக்கி செயல்படுங்கள். நம்மால் முடிந்ததை கட்டுப்படுத்துங்கள். புதிய மற்றும் எளிதான தீர்மானங்களுக்கான நேரம் இது என்று யூகிக்கவும். நம் மீது அன்பாகவும் மென்மையாகவும் இருக்கும் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார். மகிழ்ச்சியான 2023'' என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.