'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக, கேஜிஎப் -2 படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப்-3 படத்தை தொடங்கப் போவதாக சமீபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கேஜிஎப் படத்தின் நாயகன் யஷை இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது சகோதரர் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த போட்டோவை பகிர்ந்து கேஜிஎப் 3 என்று குறிப்பிட்டுள்ளனர். அதையடுத்து இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் கேஜிஎப் திரைப்படத்தில் நடிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.