அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

தர்ஷா குப்தா நடிப்பில் 'ஓ மை காட்' திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், அண்மையில் அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது. அப்போது நிகழ்ச்சிக்கு வருகை தந்த தர்ஷா குப்தாவின் ஆடையை அவரது அசிஸ்டெண்ட் மிதிக்க, அதை தர்ஷா குப்தா கோபமாக பார்ப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாக ஆரம்பித்தது. இதுகுறித்து ஊடகவியலாளர்கள் தர்ஷாவிடம் கேள்வி எழுப்பிய போது வருத்தமடைந்த தர்ஷா குப்தா, 'என்னை ஏன் தப்பா ப்ரொஜெக்ட் பண்றாங்க. நான் அப்படி என்ன பண்ணேன். நான் நடந்து வந்தப்போ என் டிரெஸ்ஸ அசிஸ்டெண்ட் மிதிச்சிட்டாரு. யார் டிரெஸ்ஸ மிதிச்சானு தான் பார்த்தேன். ஆனால், நான் அவரை முறைச்சதாவும், திட்டினதாவும், திமிரு பிடிச்சவன்னும் ப்ரொஜெக்ட் பண்ணி வீடியோ வைரல் செஞ்சிட்டு வர்றாங்க. அத நினைச்சா தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்' என்று கூறி அழுகிறார். உடனே, அங்கேயிருந்த மற்ற பத்திரிகையாளர்கள் அழுது கொண்டிருக்கும் தர்ஷா குப்தாவை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.