புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
நயன்தாராவிற்கு 2022 மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாகவே இருந்துள்ளது. திருமணம், இரட்டை குழந்தை பிறப்பு என மகிழ்ச்சியில் உள்ளார். அவர் கதையின் நாயகியாக நடித்த கனெக்ட் படம் கடந்தவாரம் வெளியானது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார் நயன்தாரா.
அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛எனக்கு இந்தாண்டு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்தது. கனெக்ட் படத்தை பார்த்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் அஷ்வின் சரவணன் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி. நன்றி. உங்களின் இயக்கத்தில் நடித்தது பெருமை. உங்களின் இயக்கம் உலகத் தரம் வாய்ந்தது. படத்தின் தயாரிப்பாளர் ரவுடி பிக்சர்ஸ் விக்னேஷ் சிவனுக்கு அன்பு கலந்த நன்றி. உங்கள் அன்பு, ஆதரவு, கருத்து, விமர்சனங்கள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இனி வரும் காலங்களில் எங்களின் புது முயற்சிக்கு இது பாடமாக இருக்கும்'' என்றார்.