எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
நடிகை திரிஷா திரையுலகில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக 20 வருடங்களை கடந்து விட்டார். தற்போது வரை கதாநாயகியாகவே நடித்து வரும் த்ரிஷா தனது இளமையான தோற்றத்தை இப்போதும் மெயின்டெயின் செய்து வருகிறார். இவருக்குப்பின் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் அறிமுகமான நயன்தாரா ஒருகட்டத்தில் திரிஷாவை ஓவர்டேக் செய்து லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் பெற்று நடிகைகளில் நம்பர் ஒன் என்கிற இடத்தில் இருக்கிறார்.
இந்த வருடம் நயன்தாரா திருமணம், வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றது என பரபரப்பு செய்திகளில் இடம்பெற்றார். அதேபோல பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரிஷாவும் மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்தார். அடுத்ததாக அவர் நடித்துள்ள ராங்கி திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது திரிஷா, நயன்தாரா இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து கூறி வருவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த திரிஷா, இந்த ஒப்பீடு நல்ல விஷயம்தான் என்று வரவேற்றுள்ளார். அதேசமயம் இது தனக்கு பிடித்த ஒருவரை புகழ்வதற்காக இன்னொருவரை மட்டம் தட்டியும் அவமரியாதை செய்தும் பேசக்கூடாது என்பதையும் வலியுறுத்தி உள்ள திரிஷா, அதற்கு பதிலாக தங்கள் இரண்டு பேரிடம் உள்ள சிறந்த விஷயங்களை பேசலாமே என்றும் இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு செய்தியையும் கூறியுள்ளார்..
திரிஷாவும் நயன்தாராவும் இத்தனை வருடங்களில் மிகப்பெரிய அளவில் சந்தித்துக் கொண்டதில்லை. ஒருவரைப்பற்றி இன்னொருவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதும் இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக அறிமுகமான அமரகாவியம் என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்யாவின் நட்புக்காக இருவரும் ஒன்றாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.