ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
மலையாளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ‛ஒரு அடார் லவ்'. பள்ளி மாணவர்களின் காதலை மையப்படுத்தி உருவான இப்படம் தமிழிலும் கூட வெளியானது. புருவ அழகி என அந்த சமயத்தில் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட பிரியா பிரகாஷ் வாரியர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதேசமயம் அந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்திருந்தவர் நூரின் ஷெரீப். இவருக்கும் அந்த படத்தின் மூலம் நிறைய ரசிகர்கள் கிடைத்தார்கள்.
சொல்லப்போனால் பிரியா வாரியரை விட மலையாளத்தில் இவருக்குத்தான் சில பட வாய்ப்புகள் கிடைத்து. பதினெட்டாம்படி, வெல்லப்பம் ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் அடுத்ததாக பெர்முடா என்கிற படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இவர் தன்னுடன் நடித்த சக நடிகரான பாஹிம் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. நண்பர்களாக பழகி வந்த எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட புரிதல் காதலாக மாறி இப்போது திருமணத்தில் எங்களை இணைக்கவுள்ளது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நூரின் ஷெரீப் .