நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள கனெக்ட் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. முன்னதாக இந்த படத்தின்பிரமோசனுக்காக ஒரு சேனலில் பேட்டி அளித்தார் நயன்தாரா. அப்போது தான் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளாதது ஏன் ? என்பது குறித்து அவர் கூறுகையில், ஆரம்ப காலத்தில் நான் நடித்த எந்த பட விழாக்களுக்கு சென்றாலும் ஹீரோக்களுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்துவிட்டு என்னை ஓரமாக நிற்க வைத்து வந்தார்கள். அதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நான் தவிர்த்து விட்டேன் என்று கூறியுள்ளார் நயன்தாரா.
மேலும், முன்பு ஒரு பேட்டியில், ஒரு படத்தில் மருத்துவமனை காட்சியில் நடித்தபோது முழு மேக்கப் உடன் தலை முடிகள் கூட கலையாமல் நயன்தாரா நடித்ததாக விமர்சனம் செய்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன். அது குறித்தும் தற்போது இந்த பேட்டியில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. அவர் கூறுகையில், ரியலிஸ்டிக் படங்களுக்கும், கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் நடிப்பது கமர்சியல் படம் என்பதால்தான் அப்படி நடித்தேன். கமர்சியல் படத்தில் ஒரு ஹீரோயினி தலையை விரித்து போட்டுக் கொண்டெல்லாம் மருத்துவமனைக்கு செல்ல முடியாது. அதோடு ஹீரோயினிகள் அதிக சோகமாகவும் இருக்கக்கூடாது. அதன் காரணமாகவே கமர்சியல் படங்களுக்கு தேவையான நடிப்பை நான் வெளிப்படுத்தி இருந்தேன் என்றும் அந்த பேட்டியில் மாளவிகா மோகனுக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் நயன்தாரா.