Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட விஜய் பட வில்லன் நடிகர்

12 டிச, 2022 - 19:16 IST
எழுத்தின் அளவு:
Vijay-movie-villain-actor-who-was-dropped-from-the-flight

இந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தவர் மலையாள இளம் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளத்தில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் பீஸ்ட் படத்தில் தன்னை டம்மி ஆக்கி விட்டதாக ஒரு பேட்டியில் கூட குற்றம் சாட்டியவர், பின்னர் அப்படி கூறியதற்காக வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள பாரத சர்க்கஸ் படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக துபாய் சென்றுவிட்டு திரும்பும்போது விமானத்தில் ஏறிய ஷைன் டாம் சாக்கோ விமானிகள் அறையில் என அழைக்கப்படும் காக்பிட் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்திருக்கிறார். இவரது இந்த நடவடிக்கை அத்துமீறலாக கருதப்பட்டு விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு ஆளான சாக்கோ, அங்கிருந்த மருத்துவமனையில் பரிசோதனைக்கும் உட்படுத்தப் பட்டார் என்று சொல்லப்படுகிறது. சில மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரும், அவருடன் வந்திருந்த அவரது குடும்பத்தினரும் வேறு ஒரு விமானத்தில் கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். நடிகர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட நிகழ்வு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கன்னட நடிகர் அபிஷேக் திருமணம் : ஆடை வடிவமைப்பாளரை மணக்கிறார்கன்னட நடிகர் அபிஷேக் திருமணம் : ஆடை ... இயக்குனர் குணசேகர் மகள் திருமண வரவேற்பு ; மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் பங்கேற்பு இயக்குனர் குணசேகர் மகள் திருமண ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

madhavan rajan - trichy,இந்தியா
13 டிச, 2022 - 19:28 Report Abuse
madhavan rajan டைரக்டர் சொன்னார் என்பதற்காக எல்லா இடத்திலும் வில்லத்தனம் காட்டக்கூடாது.
Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
13 டிச, 2022 - 08:28 Report Abuse
chennai sivakumar எல்லாம் உள்ளே இருந்து வரும் விஷயம் செய்யும் வேலை ஆக இருக்கலாம்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13 டிச, 2022 - 05:39 Report Abuse
J.V. Iyer இப்படியெல்லாம்கூட செஞ்சு தானாக மாட்டிக்குவாய்ங்களா? இப்படித்தான் சினிமாவில் எல்லோருமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in