'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன் | சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் | அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? |
ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில் பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. சூப்பர் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகாவை ஆகியோரை வைத்து இயக்கி வருகிறார் பி.வாசு. இந்த படத்தில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த சந்திரமுகி வேடத்தில் நடிக்கப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்புகள் தொடர்ந்து நிலவி வந்தது. இந்நிலையில் அந்த வேடத்தில் தாம்தூம், தலைவி படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில் தற்போது சந்திரமுகி-2 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ஜோதிகா நடித்த வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அதுகுறித்த ஒரு போஸ்டரையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் சந்திரமுகி-2 படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.