''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்து இரண்டு பாகங்களாக வெளிவந்த தெலுங்கு, தமிழ்ப் படம் 'பாகுபலி'. அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியும், பெரும் வசூலும்தான் 'பான் இந்தியா வெளியீடு' என டிரெண்டை புதிதாக ஆரம்பித்து வைத்தது.
அதற்குப் பிறகு தெலுங்கிலிருந்தும், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்தும் சில பல பான் இந்தியா படங்கள் வெளிவந்தன. இந்த வருடத்தில் மட்டும் பான் இந்தியா படமாக வெளியான தமிழ்ப் படமான 'பொன்னியின் செல்வன்', தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்', கன்னடப் படங்களான 'கேஜிஎப் 2, காந்தாரா' ஆகிய படங்கள் மட்டுமே சுமார் 3000 கோடி வசூலைப் பெற்றிருக்கின்றன.
அடுத்த வருடத்திலும் தென்னிந்திய மொழிகளிலிருந்து பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் தெலுங்கிலிருந்து மட்டுமே சுமார் 10 பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ், சலார்', பவன் கல்யாண் நடிக்கும் 'ஹரிஹர வீர மல்லு', ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம், என்டிஆர் நடிப்பில் கொராட்டலா சிவா இயக்கும் படம், அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' இரண்டாம் பாகம், பவன் கல்யாண் நடிப்பில் சுஜீத் இயக்கும் படம், நானி நடிக்கும் 'தசரா', அகில் நடிக்கும் 'ஏஜென்ட்', பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிக்கும் 'ஹனு மான்' என இந்த 10 படங்களையும் பான் இந்தியா வெளியீடாக வெளியிட உள்ளார்கள்.