7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா - பிரித்விராஜ் சந்திப்பு | யுடியூப் விமர்சகரை திட்டியது ஏன்? : உன்னி முகுந்தன் விளக்கம் | விறுவிறு போஸ்ட் புரொடக்சனில் மம்முட்டி ஜோதிகாவின் காதல் ; தி கோர் | செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்த ரன்பீர் கபூர் |
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் மாவீரன். மாஜி ஹீரோயின் சரிதா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். மாவீரன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. அடுத்த மாதம் முதல் இறுதிகட்ட பணிகளை தொடங்க இருக்கும் மாவீரன் படக் குழு, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாவீரன் படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்தடுத்து மாவீரன் படத்தின் பிரமோஷன் பணிகள் தொடங்க உள்ளன. விரைவில் இப்படத்தில் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாக இருப்பதாக உள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்த நிலையில் இந்த மாவீரன் படம் டாக்டர், டான் பட வரிசையில் ஹிட் படமாக இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.