''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சுசீந்திரன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் 'வெண்ணிலா கபடி குழு'. சுசீந்திரனுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இதுதான் முதல் படம். இப்படத்தில் அவருடன் அப்புகுட்டி, சூரி, சரண்யா மோகன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இவர்களுடன் ஹரி வைரவனும் நடித்திருந்தார். நிஜ கபடி வீரரான ஹரி வைரவன் இந்த படத்திலும் கபடி வீரராக நடித்திருந்தார். இதை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் 'குள்ளநரி கூட்டம்' படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த நிலையில் ஹரி வைரவன் உடல்நலம் பாதிக்கப்பட்டார். சில ஆண்டுகள் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த 3ம் தேதி மரணம் அடைந்தார். திரையுலகில் அவர் விஷ்ணு விஷாலுடன் மட்டும் தொடர்பில் இருந்துள்ளார். அவ்வப்போது அவர் உதவிகளும் செய்து வந்தார். தற்போது ஹரி வைரவனின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக அவரது மனைவியிடம் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து விஷ்ணு விஷால் கூறும்போது. “மறைந்த நடிகர் வைரவன் எனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் தொடர்பில் தான் இருந்தேன். என்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தேன். அவர் மனைவியிடம், உங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என உறுதியளித்தேன்” என்றார்.