சிவகார்த்திகேயன் சம்பளம் அதிரடி உயர்வு ? | சினிமா விருது தேர்வு நடந்து வருகிறது : சென்னை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் அமைச்சர் தகவல் | தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் | பிளாஷ்பேக்: 80 வருடங்களுக்கு முன்பே வரதட்சனை மாப்பிள்ளைகளை வேட்டையாடிய ஹீரோயின் | பிளாஷ்பேக் : லட்சுமி பிறந்தநாள் - தலைமுறைகளை தாண்டிய நடிகை | ‛புஷ்பா 2' ; கூட்ட நெரிசலில் பெண் பலி : நடிகர் அல்லு அர்ஜுன் கைது | 100வது நாளில் 'தி கோட்' | 'புஷ்பா 2' வரவேற்பு : ராஜமவுலியை மிஞ்சினாரா சுகுமார்? | நேத்ரன் மறைவுக்கு பின் தீபா வெளியிட்ட பதிவு | பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின் அர்னவின் சீரியல் என்ட்ரி |
தமிழ், தெலுங்கில் தயாராகும் வாரிசு படத்தில் விஜய் நடித்து முடித்து விட்டார். இந்த படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. படத்தை முடித்த கையோடு சிறிது ஓய்வெடுத்த விஜய் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். கடந்த ஆண்டு மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்த விஜய், தற்போது மீண்டும் இணைகிறார். விக்ரம் என்கிற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்து விட்டு லேகேஷ் கனகராஜூம் விஜய்யிடம் வந்து சேர்ந்திருக்கிறார்.
இருவரும் இணையும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போதைக்கு தளபதி 67 என்று வைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை நேற்று சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் எளிமையாக நடந்ததாக கூறப்படுகிறது. விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் இதில் கலந்து கொண்டனர், கேமராக்கள், செல்போன்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை, என்கிறார்கள். இதனால் படத்தின் பூஜை தொடர்பான படங்கள் வெளியாகவில்லை.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்குகிறதாம். ஏவிஎம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள இண்டோர் செட், பிரசாத் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள அவுட்டோர் செட்களில் படப்பிடிப்பு நடக்கிறது. ஆனால் இதில் விஜய் நடிக்கவில்லை. விஜய் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுகிறது என்று தயாரிப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.