7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா - பிரித்விராஜ் சந்திப்பு | யுடியூப் விமர்சகரை திட்டியது ஏன்? : உன்னி முகுந்தன் விளக்கம் | விறுவிறு போஸ்ட் புரொடக்சனில் மம்முட்டி ஜோதிகாவின் காதல் ; தி கோர் | செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்த ரன்பீர் கபூர் |
தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னை போல் ஒருவன், பயணம், வெடி உள்பட பல படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை பூனம் கவுர். தற்போது நண்டு என் நண்பன், கெஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பைப்ரோமியால்ஜியா என்ற ஒரு அரிய வகை நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தசை வலியுடன் கூடிய உடல் சோர்வு தூக்கமின்மை, மனநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் இந்த நோயின் பாதிப்புகள் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த நோயினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்த போதும் தற்போது இந்த நோயுடன் தான் வாழ பழகி கொண்டதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நோய் பற்றி பூனம் கவுர் இன்ஸ்டாவில், ‛‛பைப்ரோமியால்ஜியாவால் பல திட்டங்களைக் கொண்ட ஒரு உந்துதல் பெற்ற நபர் எதையும் செய்ய முடியாமல் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்'' என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து பலரும் அவர் விரைந்து குணமாக வேண்டுவதாக கருத்து பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே நடிகை சமந்தா மயொசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தொடர்ந்து தற்போது பூனம் கவுரும் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.