'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா |
சுராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், வடிவேலு, ஷிவானி, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிக்கும் படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. அடுத்த வாரம் டிசம்பர் 9ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் நேற்று யு டியுபில் வெளியிடப்பட்டது.
இதுவரையில் டிரைலருக்கு 24 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. இந்த 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' மூலம் வடிவேலு மீண்டும் ரிட்டர்ன் ஆவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு டிரைலர் கொஞ்சம் அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. இரண்டு நிமிட டிரைலர் எந்த ஒரு இடத்திலும் சிரிப்பே வரவில்லை. 'காமெடி' என்று வடிவேலுவும் அவரது கூட்டாளிகளும் எதையெதையோ செய்து கொண்டிருக்கிறார்கள்.
டிரைலரைப் பார்ப்பதை விட அதன் கமெண்ட் பகுதியில் இடம் பெற்ற ரசிகர்களின் கமெண்ட்டுகள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. பலத்த 'டிரோல்' ஆக இருந்த அந்த கமெண்ட்டுகளுக்கு மற்றவர்கள் லைக்குகளை அள்ளிக் கொடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று அந்த கமெண்ட் பகுதியை 'ஆப்' செய்துவிட்டார்கள். அதனால், டிரைலரைப் பார்க்கும் யாரும் எந்த ஒரு கமெண்ட்டையும் போட முடியாதபடி செய்துவிட்டார்கள்.
டிரைலர் பக்கத்தில் வேண்டுமானால் ரசிகர்களின் கமெண்ட்டுகளைத் தவிர்க்கலாம். ஆனால், அதே டிரைலரை வேறு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து கமெண்ட் செய்வதை அவர்களால் தடுக்க முடியுமா ?. அது கூடத் தெரியாமல் இப்படி யூ டியூப் டிரைலர் பக்க கமெண்ட்டுகளை 'ஆப்' செய்யச் சொல்லி ஆலோசனை சொன்ன ஆள் யாரோ ?.